Wednesday 8 May 2013

தவம்



ஆற்றினிலே ஓடுகின்ற
அயல் மீனை கண்ணாக்கி
கருவிழியால் கதைசொல்லி
காவியங்கள் தந்தவளே!
விழியோரம் விந்தைகளை
விதைத்து வைத்து சென்றவளே!
நாசியிதழ் துடிப்பினிலே
நானிசையை கண்டேனே!
பெண்ணே உன் கனியிதழின்
அருஞ்சுவைதான் நானறியேன்!
இதயத்தை களவாடி
எங்கோ நீ சென்றதனால்
இதயமற்ற வாழ்வினிலே
உழல்பவனை பாராயோ!
சுடுமணலில் நடுவெயிலில்
சப்பணமாய் உட்கார்ந்து
தவமியற்று கின்றேன் நான்,
தருவாயா உன்னிதயம்?

No comments:

Post a Comment