Sunday, 26 May 2013

அள்ளிப் பருகிட



அதி காலை கதிரொளி,
ஆற்றோர மணல் திட்டு,
அதனடுத்த தென்னந்தோப்பு,
அருகிலொரு பூந்தோட்டம்,
அங்கே ஒர் சிறு குடில்,
ஆற்றில் நீராடி,
இடுப்பில் நீர் சுமந்து,
இதழில் இசை கொண்டு,
இதயத்தில் எனை சுமந்து
காற்றில் மிதந்து வர,
பறித்த இள நீரை
பருக தொடங்கிய நான்,
உனைக் கண்ட மாத்திரத்தில்
உற்சாகப் பெருக்கெடுத்து
இள நீரை தவற விட்டு
ஓடி வருவேனடி,
உனை அள்ளிப் பருகிடவே!

No comments:

Post a Comment