Tuesday, 28 May 2013

வேகம் குறை



வாழ்வில் வேகம் குறை,
வளைவில் கவனம் நிறை,
எதிரில் வருபவனை
இயல்பாய் நினையாதே!
கனவில் உனை இழந்து
கையை முறுக்காதே!
பேசும் கருவியினை
பேசச் செய்யாதே!
உந்தன் எதிர்காலம்
கண்டு உயிர் வாழ
உந்தன் இல்லத்தில்
உயிர்கள் பல உண்டு.
உந்தன் வேதனையை
அவரில் திணியாதே!
வேகம் குறைத்து ரசி!
வாழ்வின் இனிமை ருசி!

No comments:

Post a Comment