Sunday 19 May 2013

நிசப்தம்



வரலாறு காணாத மகா யுத்தம்
என் மனதினுள்...
கண்ணபிரான் படைத்திட்ட
பகவத் கீதை படித்தாலும்
ஏற்கவில்லை என் மனது,
நல்லவை அல்லாதவை
பிரித்துணர இயலவில்லை,
காட்டாறாய் மன ஓட்டம்
பொங்கி வழிகிறது..
அணை கட்டி நல்வழி போ
எனச் சொன்னால் ஏற்கவில்லை,
எதிர்கொண்டு வருபவற்றை
தன்னுளே இழுத்து
மேலும் பொங்கி வழிகிறது,
ஆவேசம் கொண்டு
அலை பாய்கிறது,
அடங்கிப் போ எனச் சொன்னால்
ஆத்திரம் அவசரம்
எல்லை மீறுகிறது..
எங்கோ ஒரு ஜீவாத்மா!
இல்லையில்லை,
பரமாத்மா!
கடைக்கண் பார்வையாலே
எனை பார்க்க,
எங்கே என் ஆத்திரம்?
எங்கே என் அவசரம்?
எங்கே என் எல்லை மீறும் அலை?
எங்கும் சாந்தம்...!
எங்கும் நிசப்தம்..!
எங்கும் அமைதி..!
ஓரக்கண் பார்வைக்கே
இத்தனை அமைதியென்றால்...
நீயெனை ஆட்கொண்டால்?

1 comment: