Friday 17 May 2013

குருடன்


வானத்து விண்மீன்கள்
வகைவகையாய் கோர்த்து நிற்க
வேடிக்கை பார்க்க வந்த குருடனாய் நான்...
எங்கிருந்தோ வந்த என் தேவதை
என்னிரு கண்களாய் மாறினாள்..
கண்ணிமைகள் மூட மறந்தேன்
காட்சிகளில் பரவசம்,
காண்பதிலே எனை இழந்தேன்,,
ஆடினேன், பாடினேன்,
ஆனந்த கூத்தாடினேன்,
எங்கு பார்த்தாலும் வண்ணங்கள்,
இயற்கையின் நளினங்கள்,
காட்சிகள் இத்தனை அழகா?
ஆடும் சிறுவன்,
பாடும் குருவி,
ஓடும் அருவி,
எங்கும் கவர்ச்சி,
எதிலும் மகிழ்ச்சி,
சிந்தனை தறி கெட்டோட,
பாடல்கள் மனதில் குவிந்தன...
அந்தோ...
இறைவனின் சித்தம் வேறு போலும்,
என்னிறு கண்களை பரித்தெடுத்தான்
தேவனுக்கு தேவதையை பரிசளித்தான்.
எங்கும் இருள்...
என் கண்களில் மட்டுமல்ல,
என் மனதிலும் சேர்த்து.....!,
இனி என் செய்ய?
உலகின் மிகக் கொடுமை,
குருடனாய் வாழ்தலன்று,
காட்சிகள் என்னென்றறியா,
குருடனின் கண் திறந்து,
அழகினை உணர வைத்து,
ஆனந்தம் அறிய வைத்து,
மீண்டும் இருள் தந்தால்,
மிக மிகக் கொடுமையன்றோ?

No comments:

Post a Comment