Saturday 11 May 2013

போய் சேர்!



என் குருதி கொப்பளிக்க
உன் மனதின் வெறுப்பினை உமிழ்,
சர்க்கரை தேன் பாகு கலந்து
வார்த்தைகளில் தடவி
முகத்தில் பொய் மூடி இட்டு
நிலம் தெறிக்க பொய்யுரைத்த
உன்னை இனம் கண்டு கொண்டேன்!
என் நீல நிற பேனாவில் மையில்லை,
நீ படித்த கவிதைகட்கு உயிரில்லை!
எந்தன் குருதி கொண்டு
மனதின் உணர்ச்சிகளை
கவிதைகளாய் எழுதிப் பார்,
காவியங்கள் பல கிடைக்கும்!
எந்தன் காதலன் நீ என்ற நிமிடம் பொய்,
காரிருள் வானில் எந்தன்
ஒளியென் றதுபொய்,
சேலை தலைப்புகளில்
சீற்றம் இராதென்ற உந்தன்
எண்ணங்கள் பொய்,
எனக்கென நீ இத்தனை நாள்
நடத்திய நாடகம் பொய்,
இத்தனைக்கு பிறகும் நான்
உந்தன் நினைவோடு மடிவேன் என்ற
உந்தன் எண்ணம் மடிந்து போகட்டும்!
பாரதி கனா கண்ட
புதிய தமிழ் பெண்ணாய்
நான் வாழப்போவது மட்டும் மெய்!
போய் சேர்!

No comments:

Post a Comment