Friday 17 May 2013

வேகம்

வேகம், வேகம், வேகம்...
எதிலும் வேகம், எங்கும் வேகம்...
பேச்சில் வேகம், வீச்சில் வேகம்,
நாக்கில் வேகம், ருசிப்பில் வேகம்,
பாட்டில் வேகம், படைப்பில் வேகம்,
ஏட்டில் வேகம், எழுத்தில் வேகம்,
சுவைத்தல் வேகம், சுகித்தல் வேகம்,
பசித்தல் வேகம், பயத்தில் வேகம்,
உயர்தல் வேகம், தாழ்தல் வேகம்,
உணர்தல் வேகம், புணர்தல் வேகம்,
புரிதல் வேகம், பிரிதல் வேகம்,
நட்பில் வேகம், நகைத்தல் வேகம்,
நயம் பட உரைத்தல் வேகம்,
பயனுறும் கருத்தில் வேகம்,
சதி செய வந்தால் வேகம்,
சாதியை பகர்ந்தால் வேகம்,
கற்பனை வடிப்பதில் வேகம்,
காலாற நடப்பதில் வேகம்,
கதைகளை படிப்பதில் வேகம்,
கவிகளை படைப்பதில் வேகம்,
வாகன முறுக்குதல் வேகம்,
சாகசம் அடைவதில் வேகம்,
உண்மையை சொல்வதில் வேகம்,
பொய்யுரை அறிந்தால் வேகம்,
அன்பிலும் வேகம்,
அணைப்பதில் வேகம்,
கண்ணிலும் வேகம்,
கவர்வதில் வேகம்,
என்னையே உணர்வதில் இன்னும் வேகம்,
இறைவா ஏனிந்த வேகம்?
என்னிலை மறந்து உன்னையே அடைய
உதவுமா இவ்வேகம்?

1 comment:

  1. எதிலும் வேகம் விவேகம் அல்ல ...

    ReplyDelete