Tuesday, 28 May 2013

உயிராய்



உன் கண்ணில் தெரியும்
காதல் வரிகள்
படிக்க இயலவில்லை.
என் செவியில் உந்தன்
நேச மொழிகள்
விழவும் வழியில்லை.
எனினும் உந்தன்
இதயத் துடிப்பின்
இசையைக் கொண்டென்
இதயம் துள்ளுதடி!
விழியின் வழியே
இதயம் நுழைந்த
காதல் பலவுண்டு.
இதயம் நுழைந்து
உதிரம் கலந்து
உயிராய் நீயிங்கு!

No comments:

Post a Comment