Tuesday, 28 May 2013

உண்மை அறிவேனா?
















நினைவை யிழந்து நிழலை வெறித்தேன்.
கனவின் வாசலில் கண்க ளிழந்தேன்.
பாதை யறியா பயணம் தொடங்கி
பாத மிழந்து தவழ லானேன்.
வெளிச்கமில்லா இருளின் மடியில்
கூச்சம் கொண்டு அறிவை தின்றேன்.
வேட்கை கொண்டு விடையைத் தேட
வெட்க மென்று விரல்கள் பறித்தேன்.
உன்னை அறியென ஊரார் சொல்ல
என்னை யாரென என்னைக் கேட்டேன்.
உணர்வைக் கொன்று உதிரம் குடித்தால்
உண்மைக் கண்டு அறிவிப்பேனோ?

No comments:

Post a Comment