Thursday 16 May 2013

பொய் கோபம்

நேற்று முன்தினம் மாலை வேளையில்
என்னவள் என்னிடம் பொய்கோபம் பூண்டிருந்தாள்,
மாலை சூரியனை மேகம் மறைப்பதுபோல்
மணக்குமவள் கூந்தல் கொண்டு முகம் மறைத்து நின்றாள்.
கண்வழியே சிரிப்புக்கற்றை கூந்தலிடுக்கில் ஒளிர்ந்தது!
மொட்டவிழா மலராக மென்னிதழ்கள் துடித்தன.
கன்னக் கதுப்பினிலே வண்ணக் கோலம் வரைந்தபடி
என்னை மனச் சிறை திறந்து
பறித்தெடுத்துக் கொடுப்பேனென்றாள்,
நானும் ஒப்புக்கொண்டேன்.
கதவைத்திறக்க திறவுகோல் எங்கே என்றாள்.
உன் ஒளிருமிரு கண்களே திறவுகோல் என்றேன்,
கதவு திறக்குதில்லை என் செய்ய எனக்கேட்டாள்,
கூண்டல்ல உன்னிதயம், கிளியல்ல நான்.
உன்னிதய ஆலயத்தில் வாழும் தேவன் நான்,
ஆலயங்கள் தேவனை அனுப்புவதில்லையடி எனக்கூற,
ஆனந்தத்தில் எனை அள்ளிக் கட்டிக்கொண்டாள்!
கோபம் கரைந்தது! தமிழுக்கு நன்றி!

No comments:

Post a Comment