Monday, 27 January 2014

பகுதியாய் வாசித்து நிறுத்திய கதை



















பகுதியாய் வாசித்து நிறுத்திய கதையொன்று
தலையணையடியில்
கவலையுடன் காத்திருந்தது.

உறங்கப் போகுமுன்னெங்கிலும்
தன்னைத் தொடுவானோவென்று,

புரட்டிய பக்கங்களிலெல்லாம்
அவன் வியந்த விழிகளின் வாசனையே
மேலோங்கியிருந்தது.

மீதமுள்ள பக்கங்களில்
தனது மென்வாசனையை
அவனுக்கென
காத்து வைத்திருந்தது.

என்றேனும்
சில கண்ணீர் துளிகளை
அவன் கண்டிருக்கலாம்.

இன்றும்கூட
அவன் தொடுகைக்காக
விம்மலை வெளிக்காட்டாது
காத்திருக்கிறது...!

No comments:

Post a Comment