Sunday 5 January 2014

முகமலர்ச்சி

ஒருமுறை அக்பர் பீர்பாலிடம் கூறினாராம், “எல்லோருக்கும் உன்னை பிடித்திருக்கிறது. நான் அரசனாக இருந்தும்கூட உன்னையே அனைவரும் நேசிக்கின்றனர். இங்கு உள்ள அனைவருக்கும் உன்னைத் தெரியும். ஆகவே, நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்வோம். அங்கு எப்படி உன்னை வரவேற்கிறார்களென பார்ப்போம்”
            அதன்படி இருவரும் கடல்கடந்து ஒரு தூரதேசத்திற்கு சென்று கரையில் நடக்க ஆரம்பித்தனர். சிறிது தொலைவு சென்ற உடனே பார்த்தால், எதிரில் வரும் அனைவரும் பீர்பாலை பார்த்து சிரித்து வணக்கம் சொல்லிப்போக ஆரம்பித்தனர். இதைக் கண்ட அக்பருக்கு மிகவும் கோபமேற்பட்ட்து.
            உடனே பீர்பாலிடம், “நீர் இங்கு வருகிறேனென்று அனைவரிடமும் தகவல் அனுப்பிவிட்டீர்களெனக் கருதுகிறேன். உங்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். என்னை பார்த்து முறைக்கின்றனரே” எம்று கூறினார்.
            பீர்பால் சிரித்துக்கொண்டே, “இல்லை அரசே, நான் எதிரில் வரும் மனிதர்களிடம் முகமுறுவல் காட்டுகிறேன். நீங்கள் முறைக்கிறீர்கள். என் முகமுறுவலைப் பார்த்து அனைவரும் என்னிடம் சிரித்து வணக்கம் சொல்கின்றனர்.” என்று கூறினாராம்.

            எனவே நாமனைவரும் முகமலர்ச்சி எந்நேரமும் கொள்வோம்!

No comments:

Post a Comment