Saturday, 11 January 2014

அனுசரிக்காமல் போவாயோ?

அம்மட்டிலெனை 
அனுசரிக்காமல் போவாயோ?
அந்தரங்கத் தேரில்
பவனிவரும் வேளையிலும்,
அடுப்படியில் குழலெடுத்து
கனலூதும் காலையிலும்,
வெண்ணிலவில் சிறகடித்து
நாம் பறக்கும் இரவினிலும்,
வேதனையில் பிடியினெலே
மனமிறுகும் சூழலிலும்,
உதடுகள் குவித்து,
உச்சத்தை தொட்டு,
உயிரோடு இசை மீட்டி,
உணர்வோடு எனுள் ஆழ்ந்து,
அம்மட்டிலெனை
அனுசரிக்காமல் போவாயோ?

No comments:

Post a Comment