Wednesday, 27 November 2013

பாவம் நான்



இரவின் முடிவில்
எனக்கென தொடங்கிய
இருவிரல் கொண்டு
எழுதிய கவிதை
பகலவன் பயணம்
தொடங்குமுன்னே
முடிவுற்றது!
கதிரவன் கண்டு
களிக்குமுன்னே
நான் காண வேண்டுமென.
உறக்கம் கலைத்து எனை
இழுத்துச் சென்றாள்!
பாவமில்லையா நான்?

No comments:

Post a Comment