Friday 22 November 2013

ஓநாய்

மலரத் துடிக்கும்
மொட்டுக்களை
சேதம் செய்ய துடிக்கின்றனரே
சில கயவர்கள்!

வானத்து பூமாரி,
வையத்து பூங்காற்று,
கதிரொளியோ பூங்கதிர்,
என,

இடிக்கும் மழையை,
துடிக்கும் காற்றை,
வெடிக்கும் ஒளியை
இயல்பை மாற்றி
மென்மையாக்க
பூவின் மென்மையை
பரிசளித்தனர் முன்னோர்.

தோட்டம் வைத்து
மென்பூ வளர்க்கும் பெற்றோர்
தூங்கிப் போயல்லவா
இருக்கின்றனர்!

தோட்டம் சுற்றி
ஆடு, மாடுகள் மட்டுமல,
ஓநாய் கூட்டமும் அல்லவா
கும்மியடித்து காத்திருக்கிறது.

மென் பூவை கசக்கும்
ஓநாய்களை
காலம் மட்டுமே தண்டிக்கவா?
நாம் காத்திருக்கத்தான் வேண்டுமா?


No comments:

Post a Comment