Thursday, 14 November 2013

நானிப்படித்தான்...!















மழைபொழியும் சாலையில்
நெடு நேரம் நின்றிருந்தேன்.
வந்த கொடுங்காற்றினிடை
எனக்கான தென்றலைத் தேடி,

அப்புறத்து அடர் வனத்தில்
மழையில்லை,
தென்றலின் சுகந்தம் மட்டுமே,

வந்து போனவர்கள்
வேடிக்கை பார்க்க
தெரு நாய் கூட
தள்ளிப்போய் நிற்க,
அடுத்து வந்த வாகனம்
நீர் வாரி இறைக்க,

வரட்டுமந்த தென்றல்,
வரும்வரை
நானிப்படித்தான்...!

No comments:

Post a Comment