Monday 18 November 2013

ஐஸ் கிரீம்













கருகிய வானம் வெடிக்க
கசிந்துருகிய மேகம்
பொழிந்த மழை நீர்
முகத்திலே சிதற
முறுக்கிய என் வாகனம்
முந்தியது அனைவரையும்,

துப்பட்டா சிதறாமல்
கவ்வியிருந்த அவள் கைகள்
என் தோள் மீதில்,
இறுகாதோ இனி?
இணையாதோ அவளுடல்?
ஏக்கமாய் என் மனம்..!

தூரத்தே தெரிந்த
வண்ணவிளக்கு
மின்னும் கடையை
கை காட்டினாள்.
கொண்டு சென்று
வாகனம் நிறுத்தி
உற்று நோக்கினேன்.

அட,
ஐஸ்கிரீம் கடை!
கொட்டும் மழையில்
உருகும் பனியை
உள்ளருந்த வேண்டுமா?

உனைக்கண்டு
உருகியபடி இருக்கும்
எனை அருந்தக் கூடாதா?

என்மனக் கேள்வியை
வாகனத்துடன் ஓரமிறுத்தி
உள்சென்று
இரு கோப்பை வாங்கி
அவளருகமர்ந்தேன்.

ஒரு கண்மூடி
உதடு சுழித்து சிரித்து
ஒரு கோப்பையை வாங்கி
தூரமாய் வைத்து,
மறு கோப்பையை
எனக்கும் கொடுத்து,
அவளும் உண்ண,
அவளை பார்வையால்
ஆசையாய் விழுங்கியபடி,
ஐஸ்கிரீமை
உள்ளுக்குள் விழுங்கினேன்!

அந்த மழை நாள்
இனி என்று வரும்?

No comments:

Post a Comment