Friday 22 November 2013

உலகமே மகிழும்

















மண்ணில் விதைத்த விதை
மலராக,
மரமாக,
செடியாக,
கொடியாக
வளர்ந்து
வாழத்தான் வேண்டும்.

மலையில் பிறந்த நதி
இடையறாது பயணித்து
எல்லைகளை கடந்து
இசைந்து,
அசைந்து,
தவழ்ந்து,
எழில் கடலை
அடையத்தான் வேண்டும்.

கருவாய் பிறந்த உயிர்களெல்லாம்
காற்றை சுவாசித்து,
காலத்தை பயணித்து,
உயிர்களுள் ஒன்றாக
வாழத்தான் வேண்டும்.

மனிதனாய் பிறந்தவர் மட்டும்
வாழ்வின் துன்பத்தால்,
வறுமையின் தாக்கத்தால்,
அன்பின் ஏக்கத்தால்,
அமிழ்ந்து,
நசிந்து,
கசிந்து,
வாழ்வின்மேல்
விரக்தி கொள்வது ஏன்?

தவழ்ந்து வந்தால்
தரணியே பக்கம்.
எழுந்து நின்றால்
இமயமும் முட்டும்.
அன்பை பகிர்ந்தால்
அகிலமே உனதாகும்.

மகிழ்ந்து வாழ்,
உன்னால் உலகமே
மகிழும் பார்!

No comments:

Post a Comment