Sunday, 17 November 2013

அகந்தை



எனது விரலிடுக்குகளில்
வழிந்த
நிகழ்வலியின்
திரவச் சொட்டை
உறிஞ்சி மீண்டும்
உள்ளனுப்பி
இதயத் தமனிகளின்
இருட்டறையில் நிரப்ப
அங்கே ஆர்ப்பரித்து
மிதந்திருந்த
நானென்ற 
அகந்தை உணர்வுகள்
அலறியடித்து ஓடுவதை
பார்த்தபடி நான்
புன்னகைத்து இருந்தேன்..!

No comments:

Post a Comment