புஷ்பங்களை
புத்தகப் புழுவாய்
மாற்றத் துடிக்கும்
மதி கெட்ட பெற்றோர்,
கற்றதை கக்கவும்,
பின்னதை விற்கவும்
மட்டுமே
பயிற்றுவிக்கின்றனர்.
வாழ்க்கை மைதானத்தில்
விளையாடும் பொழுதுகளில்,
சறுக்குதல்களும்,
கவிழ்ப்புகளும்,
ஏமாற்றங்களும்,
சுமையென வரும்போது,
கற்று கக்கியவை
துணை வருவதில்லை.
திணிப்பவை என்றுமே
கசக்கும்,
கசப்பவையெல்லாம்
மருந்தல்ல.
இனிப்பவையெல்லாம்
விஷமல்ல,
வாழ்க்கையின் பாதை
வசந்தமாகணுமெனில்,
கற்பதை
கற்கண்டாய் உண்ணத்தான் வேணும்,
பெற்றோரும், மற்றோரும்,
பிள்ளைகளை
பிள்ளைகளாய்
பார்க்கத்தான் வேணும்!
No comments:
Post a Comment