Friday, 15 November 2013

நிலைமாற வேணும்

கரு நீல வானமென
விலகாமல் நீளுதடி,
வற்றாத நதியாக
மார்பேறி கனக்குதடி,

விதை பெற்று வளம் தேடும்
நிலம்போல சூழுதடி,
நிலையாத நிழல்காத்து
நெடுங்காதை யாகுதடி!

இருவிழியும் மூடாமல்
இரவுக்குள் தேடுதடி,
இனியெந்தன் பயணத்தில்
இமைகூட பாரமடி!

வரலாற்றின் பக்கங்கள்
ரத்தத்தில் கருகுதடி,
வலியொன்றே வாழ்வென்ற
நிலைமாற வேணுமடி!

No comments:

Post a Comment