Thursday 14 November 2013

பயிரை காப்பாயா?

















பருவ நிலை பாராது
நிழலடியே,
விழுந்த விதை,
வெளிவந்து சுடர் காண
வழியின்றி தவிக்கிறது.

மழை நின்ற பிறகு
மரம் தந்த சொட்டுகளில்
உயிர் மீண்டு துளிர்க்கிறது.

மேகத்தில் மறைந்த
கதிரொளிகள்
சிறிதே எட்டிப்பார்த்து
வெளிவந்த துளிரின்மேல்
வீசியது.

கொடுங்காற்றும் இளைப்பாறி
தென்றலாய் உருமாறி
தவந்து வந்து
துளிரின் மேல்
பனிமுத்தம் தந்தது.

இனியென்ன தேவை?
எவரேனும் வந்து
இளந்தளிரை பறித்து
இம்சிக்காதிருத்தல் வேண்டும்.

அருகிலோ நானில்லை.
காப்பதற்கு வழியில்லை.
இறைவா!
இப்பயிரை உனதென்று
காப்பாயா?

No comments:

Post a Comment