Tuesday, 5 November 2013

நீயில்லா இரவுகள்

நீயில்லா இரவுகளின்
நிழல் கூட சுடுகிறது!
நினைவுகளின் தாழ்வறையில்
சுழல்களிலே அமிழ்கிறது!

ஒரு நிமிட உறக்கத்தில்
விழித்தெழவும் முடிகிறது!
உனைத் தேடும் கனவுகளின்
பயணம்தான் நீள்கிறது!

இமை கனத்து இதழ் மடிந்து
இரவெல்லாம் துவள்கிறது!
உனை நினைந்து உனை நினைந்து
உளமுருகி உடைகிறது!

விடிகாலை குளிர்கூட
மெலிதாக வியர்க்கிறது!
விளையாடும் தமிழ்கூட
விருப்பின்றி வழிகிறது!

உணர்வுக்குள் மீண்டாலும்
உற்சாகம் குறைகிறது,
உனைச் சேரும் நொடி தேடி
உயிர் மட்டும் வாழ்கிறது

No comments:

Post a Comment