Tuesday 5 November 2013

ஓட்டுனர்

ஒரு பேருந்து தென்காசியிலிருந்து சென்னை நோக்கி போய் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்தவர்களையும், நடத்துனரையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரே இருந்தனர். ஓட்டுனர் அயர்வு மிகுதியால், பேருந்தை நிறுத்த தீர்மானித்தார்.
எனினும், நிறுத்த விருப்பமில்லாமையால், அகத்து இருந்த பயனிகளில் யாருக்கேனும் வாகனம் ஓட்ட அறியுமாவென வினவினார். அப்போது ஒருவர் எழுந்து தனக்கு வாகன ஓட்டுரிமை உள்ளது என தெரிவித்தார்.
ஓட்டுனர் மகிழ்வுடன் அந்த நபரிடம் பேருந்தை ஓட்டும்படி பணிந்துவிட்டு உறங்கிப் போனார். ஒரு மணி நேரம் உறங்கிய பின் எழுந்து பார்த்தால், பேருந்து கொடுக்கப்பட்ட இடத்திலேயே இருந்தது.
துணுக்குற்ற ஓட்டுனர், அந்த நபரிடம், “என்னைய்யா நடக்குது? ஏன் நான் கொடுத்த இடத்திலேயே வாகனம் நிற்கிறதென வினவினார்.
அதற்கு அந்த நபர் சொன்னார், “அய்யா, நான் ரோடு ரோலர் ஓட்டுபவன், எனக்கு முன் போய், பின் வந்து, முன் போய், பின் வந்து................ இப்படி ஓட்ட மட்டுமே தெரியும்” என்று.

No comments:

Post a Comment