Tuesday 5 November 2013

வெண்ணிலா
















அருகமர்ந்தவளின்
விரல் சொடுக்கெடுத்தபடி,
அவளின் சினேகிதி
ஆகாய வெண்ணிலவை
அன்புடன் அழைத்தேன்.

வெட்கப்பட்ட வெண்ணிலா
மேகத்தினிடை ஒளிந்தாள்.
வெட்கப்பட்ட என் நிலா
என்மடி புதைந்தாள்.

இரவின் கருமையில்
அவள் கூந்தல் பரவியிருக்க,
ஈசனின் வாதம்
நினைவுக்குள் வந்தது.

இழுத்தணைத்து
தலை முகர்ந்தேன்,
எங்கிருந்தோ வந்த
பட்டாம்பூச்சி
என் தலையை சுற்றி வந்து
அவள் தலையமர்ந்தது.

மலரென்று நினைத்ததோ?
எனை தெளிவிக்க வந்ததோ?
அவள் கூந்தல் மணம் கண்டு,
வண்ணங்கள் உடல் சூடி
வலம் வந்த வண்ணத்துப்பூச்சி,
எனை புரிய வைத்து,
மீண்டும் பறந்தது.

நானும்,
அவள் கூந்தல் மணம் பருகி,
அவள் மடியில் தலை சாய்ந்தேன்!

No comments:

Post a Comment