Thursday, 14 November 2013

உறவாக






















புதையுண்ட காலங்கள்
புனர்ஜென்மத் தேடல்கள்
விழியோரம் விளையாடி
வழிந்தோடும் நேசங்கள்.

நிலையாத கனவுக்குள்
நிழல்தேடும் நெஞ்சங்கள்
பிழையாக வந்தாலும்
பிழைத்தோடும் பிம்பங்கள்.

விளையாத கனியாக
காய்த்தாடும் உறவுக்குள்
வருவாயோ நீயெந்தன்
உயிர்தேடும் உறவாக?

No comments:

Post a Comment