Wednesday, 27 November 2013
பொன்னூஞ்சல்
சீலையில் கிடந்து
உறங்கிய நாட்களை
சிந்தித்தேன்,
மனம் தித்தித்தேன்.
உன் மடியும்,
உந்தன் சீலையும்,
உன் மனம்போலே
உல்லாச ஊஞ்சலெனக்கு..!
அன்புடன் மொழியும்
ஆத்ம சங்கீதம்
அம்மா நீ பாடும்
அன்புத் தாலாட்டு!
ஊஞ்சலிலாடி
உறங்குமெனக்கு
உடல் மட்டுமா உறுத்தாது?
உள்ளமும்தான்..!
இன்று
உள்ளத்து வலி போக்க
பஞ்சணையில்
எப்படிப் புரண்டாலும்
ஆறுவதில்லை,
எனை யுறக்கம்
ஆளுவதில்லை.
மீண்டுமொருமுறை
உன் சீலைப் பொன்னூஞ்சலில்
படுத்துக் கிடக்கவா?
சில மணித் துளியேனும்
என்னை மறந்து,
உள்ளம் மகிழ்ந்து,
உறங்கிக் களிக்கவா?
மன இறுக்கம் தொலைக்கவா?
Monday, 25 November 2013
Subscribe to:
Posts (Atom)