Sunday 22 September 2013

அமிலம் உமிழும்















அன்று சூரிய வீதியில்
நின்றிருந்தேன்.
மேகக் குவியல்கள்
விலகிப் போயின.
காற்றும் எனைவிட்டு
தனிமையை நாடினான்.
ஒற்றைச் சூரியனன்று
உறுத்தலில்லாமலிருந்தான்.
ஒரு கையில் கைத்தடி,
மறுகையில் வேர்கடலை கொண்டு
உற்சாகமாய் நடந்தேன்.
சட்டென்று சூடான சூரியன்
கதிர்களாலெனை தாக்கினான்.
வேர்கடலையால் அடிக்கப் போனேன்.
கைத்தடி கொண்டு நொறுக்கப் போனேன்.
பொங்கி வழிந்தான்.
தேகமெங்கும் உமிழ்ந்தான்.
சுழலாய் சுற்றினான்.
கடைசியில்
குப்பையாய் ஆக்கிப் போனான்.
நல்லவன் சூரியன்,
நான்தான் அவனை

நாசப் படுத்த துணித்தேனோ?

No comments:

Post a Comment