Monday 2 September 2013

விட்டில்கள்















கூட்டத்தில் கலந்து
நில்லென்றால் நிற்க,
குதியென்றால் குதிக்க,
ஓடென்றால் ஓட,
ஆடென்றால் ஆட,

ஒரு நாளும்
முழுத்திரையில்
முகம் காணா முகங்களாய்,
வெள்ளிமீன் மின்னுகையில்
கூடி நிற்கும்
மெழுகுத் திரிகளில் ஒன்றாய்,

ஒரு ஃப்ரேமில் கைதெரியும்
ஒரு ஃப்ரேமில் கால் தெரியும்
ஒரு ஃப்ரேமில் முகம் தெரிந்தால்
உள்ளத்து மகிழ்வை
ஊரே அறியும்!

தொடங்கும் போதென்னவோ
தானும் ஓரு
நடிகனென
மின்னுவோமென்றுதான்.
நடிப்புத் திறனில்
பல கோடிகள் வாங்கும்
நடிகனையும் மிஞ்சுவான்.

ஒரு படத்தில் நாயகனாய்
உருப் பெற்றால் போதும்,
விக்ரமை விஞ்சும்
வல்லமையுண்டு.

இப்படியே சொல்லி
வாழ்க்கையின்
இறுதிவரை
நடித்தபடி
இயல்பையே மறந்து
இன்பத்தையும் தொலைத்து
வாழும் விட்டில்கள்...!

No comments:

Post a Comment