Sunday 22 September 2013

என்னைக் கடந்த நதி















இயல்பாய் இல்லை நான்
தனிமைச் சிறையில்
தவிப்புடன்
உருவங்கள் பலவும்
என்னில் மிதந்தும்,
இழைந்தும்,
குரல்கள் பலவும்,
கேட்டும்,
கடந்தும்,
நினைவுகளின் சுமையில்,
வெகமாய் வந்த
வெள்ளமாய் என்னைத்
தள்ளிப் போனாய்.
கரை ஒதுங்கி
ரோஜாவின்
முட்காம்பின்
மேல் பட்டு
சிக்கி
நீரலையில் நீந்தாமல்
தவழ்ந்தே கிடந்தேன்.
ரோஜா மட்டும்
அவ்வப்போது
என்னை முத்தமிடுவதாக
பாவனை செய்தது
நதியலையில்
நீந்திப் போகவும் இயலாமல்,
ரோஜாவின் நட்பும்
நீளாமல்,
நெருங்காமல்
நெருங்கிய நிலையில்,
நானும்
நீந்துவதாய்
பாவனை செய்து கொண்டே
இருக்கிறேன்.
நதி மட்டும் என்னைக்
கடந்து

போய்க் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment