Monday 2 September 2013

மாறுபட்ட சமுதாயம்


நன்மையும், தீமையும் இணைந்ததே வாழ்க்கை. சுகமும், துக்கமும் கலந்ததே பாதை. நம் பார்வையில் நாம் எதை அதிகம் தேடுகிறோமோ, அதை அதிகம் அனுபவிப்போம்.
நல்லெண்ணங்களை அதிகம் விதைத்தால் நாளடைவில் நல்ல செடி, கொடிகளும், மரங்களும், பூக்களுமாய் நம் மனத் தோட்டம் பூத்து குலுங்கும். வேதனையையும், சோகத்தையுமே எப்போதும் நினைத்திருந்தால், அவை மட்டுமே அகம் முழுதும் நிறைந்திருக்கும்.
மகாகவி போல, ஏன் இப்போதுள்ள கவிகள் வீரத்தையும், மகிழ்ச்சியையும், எதிர்கால நம்பிக்கையையும் மட்டுமே விதைக்கக் கூடாது? புற்களாய் தீய எண்ணங்களும், செயல்களும் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. அவை பற்றி பேசப் பேச, அவைதான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
எதை பற்றி அதிகம் சிந்திக்கின்றோமோ அதுவாக நாம் ஆகிறோம். காதலானாலும், வாழ்க்கையானாலும், நாம் எப்படி எதிர் கொள்ள ஆசைப் படுகிறோமோ, அப்படியே நடக்கும்.
ஒரு திரைப்படமோ, பத்திரிக்கையோ, நல்ல விஷயத்தை குறித்து அதிகம் பேசவும், தீயவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலே இருக்கவும் முயற்சித்தல் நலம்.
கலைஞர்களும், மீடியாவும் நினைத்தால் மாறுபட்ட, ஒளிபடைத்த, உறுதியான சமுதாயத்தை அடுத்த 20 வருடங்களில் உருவாக்க முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன்.

No comments:

Post a Comment