எங்கோ இடிமுழக்கம்,
பேரிரைச்சல்,
கார்மேகக் குதிரைகள்
கனத்த வேகத்தில்
கடந்து போயின.
கரும் பூதங்களாய்
மலை மேனிகள்
உருண்டு கிடந்தன.
நான் மட்டும்
நல்லொளியில்
மலை படிவில்
நகர்ந்து கொண்டே இருக்கிறேன்
.
எந்நேரமும்
இருள் கவியலாம்,
மழை பொழியலாம்.
தடம் தவறலாம்.
அதற்குள்
எட்டிப் பிடிக்க வேண்டும்
என்னிடத்தை.
இப்படியோர் பயணம்
எனக்கெதற்கு?
இருந்தாலும்
மயிரிழையில் தடம் பிடித்து
தனித்தே நான்
ஓட வேண்டும்.
தரணியெனும் பயணமதை
முடிக்க வேணும்!
துணை வருவோர்
தோள் தரலாம்,
துயர் வரலாம்.
பிடிவாதம் கொண்டு
என்னிடத்தை நானே
எட்டிப் பிடிக்க வேணும்!

No comments:
Post a Comment