Thursday 17 July 2014

காதல் தோல்வி

            ராஜனுக்கு கிட்ட்த்தட்ட 5 வருடங்களாக ஷம்முவை பரிச்சயம். அவள் தன்மேல் காதல் கொண்டிருப்பதாக கனவு கண்டிருந்தான். எல்லாம் அந்த ஒரு நாளின் பிற்பகலில் அவள் ராஜனின் முகம் நோக்கி தான் அவனை காதலிக்கவில்லையென சொல்லும்வரைதான்.
            அன்றிலிருந்து அவன் சோக கீதம் இழைக்கத் தொடங்கிவிட்டான். முகத்தில் தாடி, கையில் சிகரெட், அவ்வப்போது அவளை மறப்பதற்கு குடியென அவலங்களின் முத்திரையை சூடிக் கொண்டான்.
            வீட்டிலுள்ளோர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. இறுதியில் ரங்கராஜனெனும் மன நல மருத்துவரிடம் அவனை அழைத்துச் சென்றனர்.         
            உள்ளே வந்து ராஜன் தனது கதையை கூறியதும், ரங்கராஜன் தன்வசமிருந்த பழைய டேப் ரிக்கார்டரை எடுத்து ஒரு கேசட்டைப் போட்டு இதை நான் வரும்வரை கேட்டுக்கொண்டிருங்கள் என கூறிவிட்டு போய் விட்டார்.
            ராஜனும் அவர் போன உடன் கேசட்டில் தனக்கு எதுவும் தகவல் இருக்குமோவென எண்ணி அந்த கேசட்டை பாடவிட்டான்.
            தொடங்கிய உடன் ஒரு குரல், “நான் ரொம்ப சோகமா இருகேன். எனக்கு வாழ பிடிக்கலஎன்று மட்டும் சொன்னது. ஆனால் அந்த இரண்டு வரிகளை மறுபடியும் சொல்லத் தொடங்கியது. மறுபடியும், மறுபடியும், மறுபடியும்….2 நிமிடம் பார்த்தான். 5 நிமிடம் பார்த்தான். 10 நிமிடம் பார்த்தான். 15 நிமிடமும் பார்த்தான். கேசட்டில் உள்ள வசனம் நின்ற பாடில்லை. ரங்கராஜனும் வந்த பாடில்லை. கேசட்டிலும் அந்த 2 வரி வாசகம் மட்டுமே திரும்பத் திரும்பப் படிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
            ராஜனின் பொருமை எல்லை கடந்த்து. ரங்கராஜன் எப்போது வருவாரென கேசட்டை நிறுத்திவிட்டு காத்திருக்க தொடங்கினான். ரங்கராஜனோ 1.30 மணி நேரம் கழிந்துதான் அறையினுள் வந்தார்.
            ராஜனால் பொறுக்க முடியவில்லை.ரெங்கராஜன் வந்த உடனே, “என்ன இது 2 வரிகளை இந்த கேசட்டில் முழுவதும் பதிந்து வைத்திருக்கிரீர்கள். இதை கேட்டுக்கொண்டு வேறு இருக்க சொல்கிறார்கள். எதற்காக இப்படியெல்லாம்?” என்றான்.
            ரங்கராஜன் பொறுமையாக, “ஒரு அரை மணி நேரம் சொன்ன வாசகத்தை திரும்பத் திரும்ப சொல்வதை உன்னால் கேட்க முடியவில்லையே, உன் குடும்பத்தில் உள்ளோர் உனது புலம்பலை ஆயுளுக்கும் கேட்க வேண்டுமெனச் சொல்கிறாயே, எப்படி நியாயம்?” என்றார்

            அல்மா மேட்டர்மஹாத்ரியாபேச்சிலிருந்து சுட்டது சுமன்

No comments:

Post a Comment