Saturday 13 September 2014

தெரிந்த ரகசியங்கள்

சதுரங்கக் காய்களுடன் கூடிய ஒரு சதுரங்கப் பலகையை மனக்காட்சிப்படுத்துங்கள். இரண்டு யானைகள், இரண்டு குதிரைகள், இரண்டு ஒட்டகங்கள், ஒரு ராஜா, ஒரு ராணி ஆகிய சக்திகள் முதல் வரிசையில் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசையில் எட்டு சிப்பாய்கள் அனிவகுத்து வைக்கப்பட்டுள்ளன. முதல் வரிசையில் உள்ள காய்களை நாம் சக்தியுள்ள காய்களென அழைத்தாலும் அவற்றுக்கு ஒரு குறைபாடு உள்ளது. ஆட்டம் முடியும்வரை ஒரு யானையால் ஒரு யானையாகவே இருக்க முடியும். ஒரு குதிரையால் ஒரு குதிரையாகவே இருக்க முடியும். ஒரு ஒட்டகத்தால் ஒரு ஒட்டகமாகவே இருக்க முடியும். அவற்றை நீங்கள் எந்த பெயரிட்டு அழைத்தாலும் சரி, சக்தியுள்ள காய்கள் என்று அழைக்கப்படுபவையெல்லாம் படைப்பின் கீழ்நிலையை குறிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இயல்பில் பிறந்து, இயல்புக்குள் வளர்ந்து,அதே இயல்புடன் மடிந்து போகின்றன. பிறக்கும்போது விலங்குகள் மனிதனைவிட அதிகமான ஆற்றலை பெற்றிருந்தாலும், அவை தங்கள் இயல்பால் மட்டுப்படுத்தப்படுவது அவற்றுக்கு கிடைத்துள்ள சாபம்.
ராஜா, ராணி ஆகிய காய்களை பற்றி என்ன கூறுவது? ஷேக்ஸ்பியர் சொன்னது போல் சிலர் மகத்தானவர்களாக பிறக்கின்றனர். சிலர் மகத்துவத்தை அடைகின்றனர். சிலருக்கு மகத்துவம் கொடுக்கப்படுகின்றதுஷேக்ஸ்பியரின் மொழியில் பார்த்தால் சதுரங்கத்தில் ராஜாஎன்பவர் மகத்தானவர்களாக பிறக்கின்றவர்களை குறிக்கின்றார். ராணிஎன்பவள் மகத்துவம் கொடுக்கப்பட்டவர்களை குறிக்கிறாள். ஆனாலும் ராஜா மற்றும் ராணி ஆகிய காய்கள் கூட ஒரு குறிப்பிட்ட இயல்புடன் பிறந்து, குறிப்பிட்ட இயல்புடன் மடிந்துபோகின்ற குறையை கொண்டுள்ளன.
என்னைப் பொறுத்தவரை மகத்துவம் அடைபவர்களென ஷேக்ஸ்பியர் குரிப்பிட்டது இந்த சிப்பாய்களை குறிக்கின்றன. ஒவ்வொரு சிப்பாயும் வெறும் ஆறு நகர்த்தல்களில் சக்திவாய்ந்த ராணியாக மாறிவிடும் வாய்ப்பை கொண்டுள்ளன. உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மனிதனை இந்த சிப்பாய்கள் குறிக்கின்றன. நாம் ஓர் இயல்புடன் பிறந்தாலும், நமது இயல்பைத் தாண்டி செயல்படும் திறனை கொண்டுள்ளோம்.
நாம் யாராக இருந்தோம்,.யாராக இருக்கிறோம் என்பது, நம்மால் யாராக ஆக முடியும் என்பதன்மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் தோல்வியடைந்துள்ள நாட்களில் கூட அதனால் என்ன, “மேன்மைத்துவம் தொட்டுவிடும் தூரம் தான்என்று நம்மால் முழங்கிட முடியும். சதுரங்கத்தின் சிப்பாய்களைப்போல நாமும் ஓர் இயல்புடன் பிறக்கிறோம். ஆனால் அதே இயல்புடன் மடிய வேண்டியதில்லை. அந்த சிப்பாய்களைப்போல் நாமும் வெற்றியிலிருந்து ஒருசில கட்டங்களே தள்ளியிருக்கிறோம்.


படித்ததில் பிடித்தது: தெரிந்த ரகசியங்கள் by மஹாத்ரியா ரா

No comments:

Post a Comment