Thursday 11 September 2014

ஊமையின் நாடகம்


உதிரும் முன்னரே உலர்ந்து போய்விடும்
உதட்டின்  நுனிப் பிறந்த வார்த்தைகள்
உள்ளத்துடிப்பின் ஓசைகள் அடக்கியே
ஊமையின் நாடகம் ஆடிடும்

பருகிய வேதனை சாறினை உமிழவே
வழியின்றி பொழுதுகள் கழிந்திடும்
மென் தலை பெருத்ததாய் உணர்ந்திடும் போதிலும்
புதைமணல் தேடியே அடங்கிடும்

கைவிரல் நெருக்கிய ஒலியிழை கேட்குமுன்
கசப்பினை விழுங்கிடும் வாழ்க்கையும்
கண்களில் துளிர்த்தவை பொங்கிடும் என்றே
கடந்திடும் சடுதியில் வாசலை

இத்தகை வாழ்க்கை எதற்கென அறியா
எத்தனை உயிர்கள் இப்பூமியில்
விட்டதும் பட்டதும் தொட்டதும் கொட்டிய
விடத்துளி விழுங்கியே வாழ்ந்திடும் ஜீவனே..!

No comments:

Post a Comment