Friday 12 September 2014

கலவித் துயில்

























ஈரப்பதம் நிறைந்த பொழுதினில் இருட்டில் விரிந்த பருவங்கள்
புருவம் உயர்த்திப் போதையில் பருகும் காதல் விரசங்கள்

மங்கை மோகக் கூந்தலில் தொடங்கும் காமன் ஊர்வலம்
நுதலை தீண்டும் இதழ்களில் வானின் மின்னல் தோரணம்

விழிகள் கலந்த நொடியினில் வாசல் எங்கும் பரவசம்
கன்னக் கதுப்புக் கோப்பையில் ததும்பிடும் காதல் கனிரசம்

பருகிட பற்கள் பதிகையில் ஏக்கம் தொடங்கி ஊர்ந்திடும்
இதழின் சாறை ஒற்றியெடுக்கையில் மோகக் கவிதை அறிந்திடும்

உலவும் இரண்டு அரவங்கள் உயிரில் பரவி தீச்சுடும்
அங்கும் இங்கும் தேனென அதரம் தேடி பருகிடும்

ஏங்கும் குவளைத் தேன் துளி அமுதெச்சில் படர ஊறிடும்
உருகும் வியர்வைப் பெருகிட செவ்வுதிரம் பற்றி எரிந்திடும்

இருளின் போர்வை கணங்களை இன்பம் துய்த்தே மகிழ்ந்திடும்
ரோமக் காலின் உயிர்ப்பினில் உச்சம் எட்டிப் பிடித்திடும்!

நொடிகள் நிமிடம் கரைந்திட யுகங்கள் தேவை என்றிடும்

என்னை வாங்கி நிமிரும் நீயென என் வெட்கம் நிறைந்தே பூத்திட...
காதல் மலர்ந்த வேளையில் கலப்பினமாகும் நம் கலவித் துயில்!

No comments:

Post a Comment