Monday 8 September 2014

மந்திரச் சாவி

























மந்திரச் சாவியை பற்றியிருந்த கரங்களுக்கு
மாபெரும் கதவின் மர்ம சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை

துவாரத்தில் வைத்து சுற்றியதில்
சுற்றிக் கொண்டேயிருந்ததாய் உணர்ந்தும்
சற்றும் தளராமல் முயன்றுகொண்டேயிருந்தான்

அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்த கதவின் அப்புறத்தில்
என்னவிருந்ததென்று ஏதும் அறியாது
மண்டியிட்டமர்ந்து இறைஞ்சியும் பார்த்தான்

கரச் சோர்வும், மனச்சோர்வுமவனை
களைப்புற வைத்த நொடியில்
முன்னறிவிப்பின்றி திறந்து அவனை பற்றியிழுத்து
கபளீகரம் செய்ய முயன்றதந்த மனக்கதவு

தன் நிலை பறிபோவதறிந்தவன்
தற்காப்புக்காக பற்றக் கிட்டியது
அக்கதவின் கைப்பிடியில் சிக்கிய மந்திரச் சாவி மட்டுமே

தூரத்தே இடிமுழக்கம் கொடுத்தபடி வரும்
தன் மனத்தோழனின் காலடி சப்தம்
கனத்துக் கேட்கும்வரை
எவ்வாறேனும் இறுகப் பற்றிய கரங்களின் வேதனையை
தாங்கிக் கொண்டாகவேண்டுமென உணர்ந்தேதானிருந்தான்

நெடுங்கால உயிர்த்தோழனின் காலடி சப்தமோ
வருவதும் போவதுமாய் இருந்ததேயன்றி
அவனை காப்பதற்கான அறிகுறி தென்படவேயில்லை

ஒருவேளை, இந்நேரம் வந்திருக்கலாம்..!

No comments:

Post a Comment