Thursday 8 October 2015

கற்கண்டின் சுவை


























இமை பேசும் மொழிக்கெந்தன்
இள நெஞ்சம் பரிசாகும்
இதழ் சிந்தும் தேனமுதென்
இதழ் தேடும் வரமாகும்.

சுவையெல்லாம் கூடியிரு
கருவிழியென் களமாகும்.
சுந்தரியுன் கரம் பிடிக்க
சொர்கமேயென் வசமாகும்.

செவிமடலின் மேலசையும்
சிறுகூந்தல் இசையாகும்
செங்கனியின் செழுமையிரு
கன்னத்தின் வளமாகும்.

கவிபேசும் காதலரின்
கனவெனது வரவாகும்.
கண்மணியே நம்வாழ்வு
கற்கண்டின் சுவையாகும்!

2 comments:

  1. இனிய வரிகள்
    பணி தொடர
    இனிய வாழ்த்துகள்.
    This is my web
    https://kovaikkavi.wordpress.com/about/

    ReplyDelete
  2. இனிய கற்கண்டின் பாகாய் தேன் தமிழின் ஊற்றாய் தமிழுக்குச் சுவை சேர்க்கும் இனிய கவிதை

    ReplyDelete