தாலாட்டில் உறங்க மறுத்தவள்
ஊருக்கே சங்கீதம் வைக்கிறாள்.
உடையற்ற உடலோ
சடைகொண்ட நிலையோ
உடன்கொண்டு செல்ல
தடையில்லை என்கிறாள்.
வீதிகளில் வெளிச்சம் வந்தாலென்ன
தன் வண்ண உடலின் வெளிச்சம்
காணட்டுமெங்கிறாள்.
தாயுடனான வாக்குவாதத்தில்
தங்குரலே உச்சம்.
தகப்பன் வந்து
தன்னுடலில் ஏதேனும் ஓரிடத்தில்
வலியை பதியஞ்செய்கிறவரை
அவளுக்கில்லை அச்சம்.
பொறுத்த பூமிக்கு சினம் வந்து
கருத்த உடலில் கரம் பதிக்க
வலித்த ஒரு நாள்
வாழ் நாளில் மறப்பதில்லை.
அதுவரை அந்த ஐம்பது பைசா மிட்டாய் மட்டுமே
அவள் நினைவுகளில்...!
No comments:
Post a Comment