Sunday 12 October 2014

சாக்ரடீஸ்




முன்னொரு காலத்தில்
கிரீஸ் நாட்டின் தத்துவமேதை
சாக்ரடீஸை பார்க்க
ஒரு நபர் வந்தார்..,
அந்த நபர் சாக்ரடீஸிடம்
உங்களுடைய நண்பரைப் பற்றி ஒன்று கேள்விப் பட்டேன்
அதை உங்களிடம் சொல்லலாமா.? என்றார்..
அதற்கு சாக்ரடீஸ்
நீங்கள் சொல்வதைக்
கேட்க வேண்டுமானால்
நான்
கேட்கும் மூன்று கேள்விகளுக்கு உண்மையான பதில்
கூறவும் என்றார்.
அந்த நபரும்
சரி என்றார்
முதல் கேள்வி
நீங்கள் எனது நண்பரைப் பற்றி சொல்லப் போவது
முற்றிலும் உண்மையா.??
இல்லை ஒருவர் என்னிடம்
கூறினார்.
உண்மையா என்று தெரியவில்லை..
இரண்டாம் கேள்வி
என் நண்பரைப் பற்நல்லவிதமாகக் கூறப் போகிறீரா.??
நிச்சயமாக இல்லை
மூன்றாம் கேள்வி
நீங்கள் சொல்வதை
நான் கேட்பதால் எனக்கு ஏதும் நன்மை ஏற்படுமா.??
இல்லை பயன்படாது
என்றார்
இப்போது சாக்ரடீஸ்
அவர்கள் அந்த நபரிடம் நீங்கள் சொல்லவந்த தகவல்
உண்மையுமில்லை
நேர்மறை யானதும் இல்லை.
எனக்கு பயன்படவும் போவதில்லை.
பின் நான் ஏன் அதனைக் கேட்க வேண்டும் என்றார் சாக்ரடீஸ்.
மொழிமாற்றம் ராம் கோவை

No comments:

Post a Comment