Sunday 14 June 2015

Sha Hameed




ருத்தாய்வு

Sha Hameed

இன்று பிறந்த நாள் காணும் எனதினிய நண்பன் ஷா ஹமீதினுக்கு முதற்கண் எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை பகர்ந்துவிட்டு தொடர்கிறேன்

முக நூலில் எனது தொடக்கம் முதல் இன்று வரை எனை நீங்காத நீண்ட கால நண்பன் இவரே. மிக அன்பான பண்பான நல்லுள்ளம் கொண்ட அன்பன். இதுகாரும் இவர் கடுஞ்சொல் ஒரு முறை கூட யார்மீதும் பிரயோகித்து அறியேன். அத்தனை நண்பர்களிடமும் அன்பை மட்டுமே பகிர்பவர்.

ஆரம்ப காலத்திலிருந்தே எழுத்தின் மீதும் தமிழின் மீதும் அளவிலாக் காதல் கொண்டிருந்த இவர் எழுதத் தொடங்கிய காலம் முதல் எண்ணற்ற படைப்புகளை நமக்கு நல்கியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருப்பதை அவருடைய நண்பர்கள் அனைவரும் அறிவர்.

இந்த மெருகேற்றம் அவரது தமிழின்பாலுள்ள பற்றும் அவருக்குள்ள தொடர்ந்து கற்கும் ஆவலும் மிக அதிகமென நமக்கு புலனாக்குகிறது

அனைத்து விதமான படைப்புகளையும் நமக்கு அளித்துள்ள இவர் சமூகக் கண்ணோட்டம் மிகுந்தவர். பெண்மையின் மீது அளவில்லா மதிப்பும் சமூக அக்கறையும் மிகுந்தவர்.

அன்று தவழும் வயதில்
எனத் தொடங்கும் இக்கவிதையில் வெளிப்படும் தனம்பிக்கையூட்டும் வரிகள் குழந்தையை நோக்கி சிகரம் தொட வாவென அழைப்பது மிகவும் அருமை

ஏய் நிலவே என அழைத்து நிலவுக்குப் பாடம் சொல்கின்றேனென்று நண்பன் சொல்லும் பாடம் எளிதில் காதலெனும் மாயையில் சிக்கி அவதியுறும் அனைத்து யுவ யுவதிகளுக்கும் நல்ல பாடமே

சக்கரவாகப் பறவை நான் என்னும் இக்கவிதையில் அனலி ஆட்சி செய்யும் நேரம் என தனது சொலாற்றலை வெளிப்படுத்துகிறார்

இக்கவிதையில்
அத்தனையும் அழித்த
யுத்தமது
தொடுப்பவரையும் 
தோற்பவரையும் விட்டு 
வாழ்பவர்களின் 
வாழ்வாதாரத்தையல்லவா 
சிதைக்கிறது
என்ற இந்த வரிகள்தான் எத்தனை ஆணித்தரமாக யுத்தத்தின் கொடுமையை பறைசாற்றுகிறது

இக்கவிதையில் காதலின் அழகை நெருக்கத்தை சொன்னவிதம் நமையும் இவரது எழுத்தில் காதல் கொள்ளவைக்கிறது

இன்னும் பலப்பல கவிதைகளை மேற்கோள் காட்ட முடியுமென்றாலும் எனதன்புத் தோழமைகள் நீங்களே அவற்றை படித்துப் பார்த்தல் மேலும் இனிமை பயக்குமன்றோ?


அன்பு நண்பனின் அபார மொழித்திறன் என்னை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கிறது. உங்களையும் வியக்கவைக்குமென்பதில் எனக்கும் சந்தேகமேயில்லை. வாருங்கள். வாழ்த்துங்கள். வணக்கம்

No comments:

Post a Comment