Monday 4 August 2014

வாழ்வியல்

                        எனது பெற்றோர் எனது முன்னிலையில் இது வரை சண்டை பிடித்ததாக நினைவில்லை. அதற்காக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், வரும் கருத்து வேறுபாடுகளை எவ்விதம் தவிர்க்கலாம், யார் விட்டுக்கொடுக்கலாம் என்றே எனக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
சில அடிப்படைக் காரியங்களில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை வரும் நேரத்தில் விட்டுக் கொடுக்க முடியாமல் போகும் நேரத்தில், அந்த இத்தை விட்டு அகலவே முயற்சிப்பார்கள். அதனால் அந்த காரியத்தின் முடிவு ஒத்திவைக்கப்படுமே அல்லாது தீர்க்கப்படாமல் இருக்காது. இவை நான் என் பெற்றோரிடம் கண்டு படித்தது.
ஒருவருக்கொருவர் என் முன்னிலையில் அன்பு காட்டுவதில் தான் சளைத்தவர் இல்லையெனவே காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். தந்தையைத் தாயும், தாயை தந்தையும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுத்து நான் கண்டதில்லை.
                      இவையெல்லாம் எனது வாழ்க்கைக்கு நான் படித்த பாடங்கள்.

                          ஒரு நாளிரவு எனது உற்ற நண்பனிடமிருந்து அழைப்பு, உடனே வா என. நான் ஓடிச் சென்று பார்த்தபோது அவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு உடனே காரில் கொண்டு போனோம். என்ன ஆயிற்று என போகும் வழியில் கேட்ட போது, அவன் தனது மனைவியை கோபத்தில் திட்டியவாறு அங்கிருந்த கதவை எட்டி உதைக்க, கதவில் துருத்தி இருந்த ஆணி அவன் காலை பதம் பார்த்து விட்ட்து. பாவம். இப்போது துடிப்பது அவனல்லவா? அந்த மனைவியும், மகளுமல்லவா அவனது தேவைகளை இப்போது கவனிப்பது!

1 comment:

  1. ஒருவருக்கொருவர் என் முன்னிலையில் அன்பு காட்டுவதில் தான் சளைத்தவர் இல்லையெனவே காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். தந்தையைத் தாயும், தாயை தந்தையும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுத்து நான் கண்டதில்லை. // வாழ்க்கையின் வெற்றி ரகசியமே விட்டுக் கொடுப்பதில்தான்

    ReplyDelete