Friday 8 August 2014

உனது பயணம்

புறத்தணுப்பில் பூமியே அமிழ்ந்திருக்க
மனக்குளிரைப் போக்க 
மடிக்கணப்பில் சாய்ந்து
விரல் சொடுக்கின் வழி
வேதனையை உதிர்த்திருந்தேன்

சங்கீத சிணுங்கலுடன் நீ அழைக்க
பூவிழிக்குள் புகுந்தவனின்
புன்னகைக்கு உயிர் கொடுத்தாய்

வியர்க்காத நுதல்மீது
விரல் கொண்டு துழாவி
சுருள் கேசம் விலக்கி
சுவையிதழால் ஒற்றி
நீங்காது ஆட்கொண்டேனெனச் சொன்னாய்

வேலையெனும் வெந்தணலில் நானின்று ஆழ்ந்திருக்க
மழைச்சாரல் சுவாசித்து
எனைவிடுத்த உனது பயணம்
எவ்வாறு உள்ளதடி என்னுயிரே!

1 comment:

  1. சங்கீத சிணுங்கலுடன் நீ அழைக்க
    பூவிழிக்குள் புகுந்தவனின்
    புன்னகைக்கு உயிர் கொடுத்தாய் // அருமை !

    ReplyDelete