Saturday, 6 July 2013

தொடத் தொட



தொடத் தொட விழைந்தேன்
தொடும் வரை பயந்தேன்,
சுடச் சுடக் கனிந்தேன்
சுடும் வரை மகிழ்ந்தேன்
வடம் வடம் வரைந்தேன்
வார்குழல் அளந்தேன்
நிதம் நிதம் தொலைந்தேன்
நிம்மதி இழந்தேன்
தொடு விரல் துடிப்பிலே
துன்பத்தை மறந்தேன்.
அகம் புறம் அவளாய்
மாறிடத் தவித்தேன்,
அரும் பெரும் காதல்
என்றதை உணர்ந்தேன்
கருவிளை கூவிளைக்
கவிதையில் களித்தேன்.
ஈருடல் ஓருயிர்
என்றாகிட வரம் தா!

No comments:

Post a Comment