Wednesday, 24 July 2013

இரண்டில் ஒன்று



அப்பா,
வானம் தொட்ட
விசைப் படகில்
வெகுதூரம் சென்றுவிட்டார்.
வீதியில் போய்
விளையாடும் காலங்கள் தவிர்த்து
வானத்தை நோக்கி
வரும் நாளைப் பார்த்திருந்தோம்.
முன்னரே ஒரு காலிழந்து
முடமாகி வந்தவர்.
திரைகடலோடி
திரவியம் திரட்டி வருவாரோ?
அன்றி
தீவிரவாதி எனும்
பட்டம் பெற்று
கயவர்கள் கையால்
மாள்வாரோ?
எம்குலம் கொன்ற
இதயமற்ற நீசர்களின்
கையில் சிக்காமல்
வரவேண்டும்,
இன்றேல்
செத்து மடிய வேண்டும்!
இரண்டிலொன்று
எமக்கு சரிதான்.

No comments:

Post a Comment