Saturday, 20 July 2013

மலை ராணி



 
 

















மலை நாட்டின் ராணியவள்
மரகதப்பூ மேனியவள்
நிலை கொண்டு எனை வென்றாள்
நிழல் மேகம் தரை வந்தாள்.

குவி அதரத் தேன் துளியும்
குருகுருத்த மருட் பார்வையும்
புவி காணா மலர் சோலையும்
புதிதா யென் மனம் தைத்திட

இனியுன்னை இணையாமலே
இருந்தென்ன பலனென்று என்
மனம் சொன்னதை மறு பேச்சின்றி
மதிப்பீடு செய் கனாக் காதலே!

No comments:

Post a Comment