Tuesday, 16 July 2013

காதலில் ராணி

பவளக் கொடியில்
பவனி வரும் நீ
ராஜகுமாரி,
யவ்வனம் கொண்டு
என் மன வானில்
பெய்ய வை மாரி!
சிற்றிடை மையல்
செவ்வரி பூண்ட நீ
சந்தன மேனி,
பற்றிய கையில்
பால் மணம் தந்து
ஒழுகிடு வாய் நீ!
கடுகவே வந்து
கடிமணம் கொள்வேன்
காதலில் ராணி!

No comments:

Post a Comment