Sunday, 14 July 2013

இனியொரு தாய்
























பிழை திருத்தம் தவறெனக் கொள்,
பிழைத்திருக்க வழியொன்றை சொல்,
மறுபிறப்பை கனவெனக் கொல்,
மனம் புகுந்து வாலிபம் வெல்.

சுவையிலை யென் இரவுகள் வெண்
புகையிடை பெண் தேவதை நில்.
உருவிலை யுன் மனமது என்
உணர்வினை வென்றது என காண்.

கருவிலென் தாயெனும் பெண்
அனுதின மென் மகிழ்வினில் கண்
காதலி லென் கவிதையின் பண்
வாழ்வினில் நீ இனியொரு தாய்!

No comments:

Post a Comment