Friday, 19 July 2013

படகில் நாம்

உற்சாகக் குளிர்மழை
உள்ளத்திலும்,
உன்னுடன் செல்ல
இருபடகைக் கொண்டுவந்தேன்.
ஊர்வலமாய் கொண்டு செல்ல
ஒத்திகைக்காய்
ஒரு படகு!
உல்லாசக் கதை பேசி
உலாப் போக
ஒரு படகு!
மழை மேகம் பரிகசிக்க
குளிர்தென்றல் கணை தொடுக்க
மந்தகாசப் புன்னகையில்
உன் மார்போடு
சேர்ந்திருக்க
கரம் கோர்த்து
மனம் வேர்த்து
இதழ் பூத்து
இமை சேர்த்து
இரு சுவாசம் ஒன்றாகி
உலாப் போவோமா மழை நீரில்?

No comments:

Post a Comment