Sunday, 28 July 2013

எதிர் நோக்கி

தூரத்து விடிமீனோ?
தொலைந்த எங்கள் கற்பனையோ?
வானத்துக் குடுவையிலே
வடித்த எங்கள் சிந்தனையோ?
நீந்திவர நீரில்லை,
நடந்து வர நிலமில்லை.
பறந்துவர சிறகில்லை.
பழகினவர் துணையில்லை.
எம் கால்கள் வலுப்பெற்று
எம் கரங்கள் முறுக்குற்று
நிமிர் நடையில் நேர் நோக்கி
நெறிகெட்டு சிறுமியரை
நிலைகுலைய செய்தவனை
கனல் தெறிக்க கொய்துவரும்
காலமதை எதிர் நோக்கி....!

No comments:

Post a Comment